×

போதைப்பொருள் ஒழிப்புக்கான முதல்வரின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை: ராமதாஸ் டிவிட்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டி.எஸ்.பி நியமிக்கப்படுவார் என்றும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வலுப்படுத்தப்படும் என்றும், சைபர் செல் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை. போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் உருவாக்கப்படும்.

போதைப் பொருள் வணிகர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படும். போதைப் பொருள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்பவையும் வரவேற்கத்தக்கவையே.போதைப் பொருள் ஒழிப்புக்கான முதல்வரின் ஆணைகள் காவல் துறையினரால் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். போதைப் பொருள் ஒழிப்பில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்சியர்கள் - காவல் அதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : CM ,Ramadoss Devitt , CM's anti-drug announcements laudable: Ramadoss Devitt
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!