விருதுநகரில் மருத்துவ மாணவர் தற்கொலை

விருதுநகர்: விருதுநகர், விக்னேஷ் காலனியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (48). மருத்துவமனை மற்றும் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் லோகேஷ் (22) கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் விருதுநகருக்கு வந்தார். லோகேஷ்க்கு ஆக. 11ல் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு சாதாரணமாக கொண்டாடுவோம் என லோகேஷிடம் தாயார் தெரிவித்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர், நேற்று இரவு சோர்வாக இருப்பதாக கூறி மருந்துக்கடையில் இருந்து தூக்க மாத்திரை எடுத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் தலைவலி மற்றும் தலை சுற்றுலாக இருப்பதாக கூறி உள்ளார். சட்டைப்பையில் மாத்திரை அட்டை முழுவதும் காலியாக இருந்துள்ளது. இதையடுத்து பெற்றோர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: