கால்நடைகளை தாக்கும் பெரியம்மைக்கு தடுப்பூசி: இந்திய நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: பெரியம்மை நோயை கட்டுப்படுத்துவதற்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் 2 நிறுவனங்கள் புதிய தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளுக்கு பெரியம்மை எனப்படும் புதிய வகை தோல் தடிப்பு நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக ராஜஸ்தானில் 2,111, குஜராத்தில் 1,679, பஞ்சாபில் 672, இமாச்சலப் பிரதேசத்தில் 38, அந்தமான் மற்றும் நிகோபரில் 29 மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 26 கால்நடைகள் இறந்துள்ளன. இந்நிலையில், இந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் அரியானாவின் ஹிசாரில் உள்ள என்ஆர்சிஇ, உத்தரப் பிரதேசத்தின் இசாட்நகரில் உள்ள ஐவிஆர்ஐ ஆகிய 2 நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் புதிய தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இதனை வணிகமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகம் செய்தார்.

Related Stories: