விடை பெற்றார் வெங்கையா புதிய துணை ஜனாதிபதி தன்கர் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்றுடன் ஓய்வு பெற்றார். புதிய  துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான வெங்கயைா நாயுடு, கடந்த 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் 11ம் தேதி  நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். நேற்றுடன் அவர் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். மாநிலங்களவை தலைவராகவும் அவர் இருந்தார். நேற்றுடன் தனது பணிகளை முடித்துக் கொண்ட அவர், நாடாளுமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி நடந்த  புதிய துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றிப் பெற்றார்.   

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக இன்று அவர் பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

13 கூட்டத் தொடர் 177 மசோதாக்கள்

* மாநிலங்களவையில் வெங்கையாவின் பதவிக் காலத்தில் மொத்தம் 13 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. இவற்றில் 261 அமர்வுகள் நடைபெற்றன.

* இந்த தொடர்களில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா, குடியுரிமை திருத்த மசோதா, சர்ச்சைக்குரிய வேளாண் சட்ட மசோதா உட்பட 177 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

Related Stories: