×

ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும்: ஒன்றிய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக விடுதலையின் அமிர்த பெருவிழா என்ற பெயரில் ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி என்ற நிகழ்ச்சிக்கும் ஒன்றிய  அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மன் கி பாத் ரேடியோ உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை  கொண்டாடும் வகையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி என்ற சிறப்பு பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. எனவே அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள கடிதத்தில், ‘ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி என்ற இயக்கத்தில் அனைத்து குடிமக்களும் பங்கேற்கும்படி செய்ய வேண்டும். நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள் நாட்டுக்கு அளித்த பங்களிப்பை நினைவுபடுத்தும் விதமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும். குடியரசு தின விழாவை போன்று மாநில, யூனியன் பிரதேச தலைநகரங்களில் உணவு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Union Govt , Hoisting of national flag in every house should be encouraged: Union Govt
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...