கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிக்குட்பட்ட குளத்துமேட்டு தெரு பகுதியானது தினசரி காய்கறி மார்கெட் மற்றும் கடைவீதி சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையானது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலையாக அமைக்கப்பட்டது. அந்த சாலை வழியாக கார், ஆட்டோ, டெம்போ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகிறது. மக்கள் அத்தியாவசி பொருட்கள் கடைகளுக்கு வாங்க சென்று வருகின்றனர்.

இந்த சிமெண்ட் சாலையானது சில வருடங்களாகவே பெயர்ந்து குண்டும் குழியுமாகவே இருந்து வருவதால் இருசக்கர உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டி நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு குண்டும் குழியுமாக உள்ள சிமெண்டு சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: