ஏடிஎம் கொள்ளையின்போது கொல்லப்பட்ட காவலாளி குடும்பத்திற்கு ரூ.3.75 லட்சம் நிவாரணம்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: ஏடிஎம் கொள்ளையின்போது கொல்லப்பட்ட காவலாளி செல்வம் குடும்பத்திற்கு ரூ.3.75 லட்சம் நிவாரணம் எஸ்.பி.ஐ வங்கி வழங்கியுள்ளது. ரூ.3.75 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டதாக எஸ்பிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் அளித்துள்ளனர்.  மதுரை வாடிபட்டியில் ஏடிஎம் கொள்ளையின்போது கொல்லப்பட்ட செல்வத்தின் மனைவி ராஜம்மாள் தொடந்த வழக்கில்  காவலாளி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: