×

இலங்கையில் இடைக்கால அரசை கவிழ்த்துவிட்டு பொது தேர்தல் நடத்த வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சி

கொழும்பு: இலங்கையில் மின்சார கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் இடைக்கால அரசை கவிழ்த்துவிட்டு பொது தேர்தல் நடத்த வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார நுகர்வு கட்டணத்தை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஒரு யூனிட்டிற்கு 75 % வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் மாதத்திற்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனி ரூ.198 கூடுதலாக செலுத்த வேண்டும்.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் வாசி உயர்வால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு தற்போது மின்கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இடைக்கால அரசை கலைத்து விட்டு உடனடியாக பொது தேர்தலை நடத்த வேண்டும்  என்று வலியுறுத்தி இலங்கையில் பொதுமக்களும் தொழிலார் கூட்டமைப்பினரும் போராட்டங்களை தீவிரப்படுத்துள்ளனர்.

கொழும்புவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பௌத்த துறவிகளும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்று இலங்கையில் உடனடியா தேர்தலை நடத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கொழும்பு ஒன்றில் இருந்து தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு அடைக்கலம் கொடுக்க பல்வேறு நாடுகள் மறுப்பு தெரிவித்துவிட்டு நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து முழு பாதுகாப்பு அளிக்க அதிபர் ரணில் விக்ரம சிங்கே முயற்சி செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரணில் தலைமையிலான தற்போதைய காபந்து அரசை கலைத்து விட்டு உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இலங்கை மக்கள் வலியுறுத்தியுள்ளார். தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டங்களை தீவிரப்படுத்த போவதாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் வர்த்தக கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sri Lanka , Sri Lanka, Interim Government, General Election, People's Rebellion
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்