கோட் சூட்’ அணிய முடியாமல் தவித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன்: கடைசியில் உதவிய மனைவி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் கொடுத்தது மட்டுமின்றி பல வாக்குறுதிகளையும் அளித்தார். தனது பயணம் முடித்துக் கொண்டு திரும்பும் போது கென்டக்கி விமான நிலையத்திற்கு வந்தார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் செல்ல முயன்ற போது, தனது ‘கோட் சூட்’ அணிய முயன்றார். ஆனால், அவரால் கோட் சூட்டை அணிய முடியவில்லை.

ஒரு கையை கோட் சூட்டில் மாட்டிய அவர், மற்றொரு கையை கோட் சூட்டில் விடமுடியாமல் தவித்தார். ஒருகட்டத்தில் தனது அருகில் நின்றிருந்த மனைவியின் உதவியை நாடினார். பின்னர் அவர்தான் ஜோ பிடனுக்கு கோட் சூட் அணிய உதவினார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: