பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட்டிற்கு ஒன்றிய அரசு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், அம்மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யாதை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து துணை நிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசையின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரிக்கு தேவையான நிதியை பெற்று தராமல், மாநில வளர்ச்சிக்கு தடையாக அரசியல் செய்து கொண்டிருக்கும் ஆளுநர் உடனடியாக பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.

Related Stories: