மாலத்தீவு, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு கோத்தபய ஓட்டம்

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு ஓட்டம் பிடிக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள்  கடுமையான போராட்டங்களை நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் அதிபரின்  அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால்  வேறுவழியின்றி மாலத்தீவு வழியாக கடந்த ஜூலை 14ம் தேதி முன்னாள் அதிபர்  கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு ஓட்டம்பிடித்தார். இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டின் விசா விதிமுறைகளால், அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு கோத்தபய ராஜபக்சே செல்கிறார். நாளை அவர் தாய்லாந்து வந்து சேர்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: