×

மைக்ரோசாப்ட் தலைவரானார் சத்ய நாதெள்ளா

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்டீவ் பால்மருக்கு பிறகு, 2014ம் ஆண்டு சத்ய நாதெள்ளாவை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தது. அதே நேரம், ஜான் தாம்சன் இயக்குநர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சத்ய நாதெள்ளா தற்போது இயக்குநர் குழு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தொழிலை மேம்படுத்த தேவையான உத்திகள், முக்கிய பிரச்னைகளை கண்டறிந்து இயக்குநர் குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை செய்ய, இயக்குநர் குழு தலைவராக இவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக மைக்ரோசாப்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு இயக்குநர் குழு தலைவராக வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், ஜான் தாம்சன், பில்கேட்ஸ் ஆகியோர் மட்டுமே இயக்குநர் குழு தலைவராக இருந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து சத்ய நாதெள்ளாவுக்கு இயக்குநர் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது….

The post மைக்ரோசாப்ட் தலைவரானார் சத்ய நாதெள்ளா appeared first on Dinakaran.

Tags : Satya Nadella ,Microsoft ,New York ,Satya Nadellaa ,Steve Ballmer ,
× RELATED 1965 மணி நேரம், 163 பேர் உழைப்பில் உருவான அலியா பட் புடவை