ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய 30 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு: வனப்பகுதியில் பாதுகாப்பாக செயலிழக்க வைப்பு..!!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையின்போது சிக்கிய சுமார் 30 கிலோ வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. புல்வாமா மாவட்டத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. பரவலாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சர்குலர் சாலை அருகே தகாப் கிரான்சிங் என்ற இடத்தில் சுமார் 30 கிலோ எடைகொண்ட வெடிகுண்டு ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை கைப்பற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

உரிய சோதனைகளுக்கு பிறகு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு ராணுவத்தினரால் பாதுகாப்பான சூழலில் வனப்பகுதியில் வெடித்து செயலிழக்கப்பட்டது. 75வது சுதந்திர கொண்டாட்டங்களுக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: