×

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி

அறந்தாங்கி : ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் 2022-2023 பயோ ப்ளாக் டெக்னாலஜி என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான புத்தாம்பூரில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி கலந்து கொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கோட்பாடுகள் துறைகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் பயன்பெறும் வழிமுறைகளையும் தொகுப்பு அமைத்தல் தொகுப்பு அமைப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் பிரவீனா வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மானிய விபரங்கள் பி.எம்.கிஜான் ஈ.கே.ஒய்.சி செய்யும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

மணமேல்குடி மீன்வளத்துறை ஆய்வாளர் அர்த்தீஸ்வரன் மற்றும் கோட்டைப்பட்டிணம் மீன்வளத்துறை சார் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கினர். பயோ ப்ளாக் தொழில்நுட்பம் என்பது கூண்டு அல்லது தொட்டி மீன் வளர்ப்பு என்பதாகும். மீன் வளர்ப்பில் ஏராளமான நன்மைகள் இருந்தும் தண்ணீர் மற்றும் குளம் அமைத்து பராமரித்து வருவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த பயோ ப்ளாக் தொழில்நுட்பமானது நாம் நினைத்த இடத்தில் குறைவான தண்ணீரை கொண்டு சிறிய பரப்பில் அதிக மீன் வளர்த்து லாபம் அடைய வழி செய்கிறது.

இரும்பு வலை மற்றும் தார்பாலின் சீட்களை கொண்டு 4 மீ சுற்றளவு 1.5 மீ உயரம் கொண்ட தொட்டி அமைத்து ஒரு தொட்டிக்கு 800-1200 மீன் குஞ்சுகள் விடலாம். இதில் 4-6 மாதங்களில் 420 கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.120 வீதம் ரூ.50400 வருமானம் கிடைக்கும். செலவு போக ரூ.25000 லாபம் அடையலாம். ஒரு தொட்டியில் இருந்து வருடத்திற்கு இரண்டு முறை மகக்சூல் எடுப்பதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.50000 இலாபம் கிடைக்கும். வீட்டின் தோட்டம் மற்றும் மாடிகளில் இத்தொழில்நுட்பத்தின் மூலம் மீன் வளா;த்து பயனடையலாம்.அறுவடை காலம் முடிந்த பிறகு தொட்டியில் உள்ள தண்ணீரை தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொள்ளலாம்.

இந்நீhpல் சத்துக்கள் அதிகம் உள்ளதால் மரம் மற்றும் பயிh;களுக்கு மிகவும் ஏற்றது. என்று கூறினர்.பயிற்சியின் முடிவில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் விளக்கமளித்தனர். புத்தாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளார் மகேஸ்வரி வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரமணி பயிற்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags : Arantangi : State implemented through Auduayarkoil Regional Agricultural Technology Management Agency
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...