ஜோலார்பேட்டை நகராட்சியில் ₹25 லட்சம் மதிப்பீட்டில் டிஐ பைப் அமைக்கும் பணி-நகராட்சி ஆணையர் ஆய்வு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை நகராட்சியில் 15-வது நிதிக்குழு மூலம் ஏசி பைப்பை அகற்றி ₹25 லட்சம் மதிப்பீட்டில் டிஐ பைப் அமைக்கும் பணியை நகராட்சி ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளை துறை அதிகாரிகள் மூலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட கோடியூர் காவல் நிலையம் சாலையில் இங்குள்ள பொதுமக்களின் குடிநீர் விநியோக பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏசி பைப் அமைக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஏசி பைப்பானது அடிக்கடி பழுது ஏற்பட்டு சாலைகளில் ஆங்காங்கே பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வந்தது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கப் பெறாமல் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் அடிக்கடி பைப் லைன் உடைந்து சீரான குடிநீர் கிடைக்கப்பெறாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பைப் லைனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி நடவடிக்கையால் நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் பழனி முன்னிலையில் ஆலோசனை செய்யப்பட்டு 15-வது நிதி குழு மூலம் குடிநீர் விநியோகத்திற்காக பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட ஏசி பைப் லைனை அகற்றி டிஐ பைப் லைன் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் காவல் நிலையம் சாலையில் ஏசி பைப் லைனை அகற்றி டிஐ பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜேசிபி இயந்திரம் மூலம் மூலம் நடைபெற்று வரும் பைப்லைன் அமைக்கும் பணியை நகராட்சி ஆணையாளர் பழனி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நகர மன்ற துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் கோபு உள்ளிட்ட அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பல உடனிருந்தனர்.தற்போது இந்த மாற்று பைப்லைன் அமைப்பதன் மூலம் இங்குள்ள பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: