அதிமுக அலுவலக சாவி வழக்கை ஆக.19-க்கு முன் விசாரிக்க ஓபிஎஸ் கோரிக்கை: விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அறிவிப்பு

டெல்லி: அதிமுக அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் 11ம் தேதி நடந்தபோது, கட்சி அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றதால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி மேல்முறையீடு செய்தார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆக.19ம் தேதிக்கு முன் விசாரணைக்கு எடுக்க தலைமை நீதிபதி முன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே முறையிட்டார். நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 19ம் தேதி முடிவதால் அதற்கு முன் மனுவை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு ஆக.19க்கு முன் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: