×

கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமத்தில் கதவணை கசிவால் 200 ஏக்கரில் தண்ணீர் புகுந்தது

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு கிராமத்தில் கதவணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 200 ஏக்கரில் தண்ணீர் புகுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு வடிகால் வாய்க்கால் உள்ளது. அந்த பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை, கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் அமைந்துள்ள கதவணை வழியாக வெளியேற்றும் தன்மை வாய்ந்தது.ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது, மூடப்பட்டு விடுவதால் ஆற்றில் உள்ள தண்ணீர் வயல் பகுதிக்கு வெளியேறுவது தடுக்கப்படும்.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், முதலை மேடு கிராமத்தில் கதவணையில் உள்ள இரும்பு கதவு வழியே தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறி வயல் பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் ஆற்று நீர் புகுந்துள்ளது. தொடர்ந்து நீர் வெளியேறினால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழும் நிலை ஏற்படும். இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிகமாக கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டாலும், நிரந்தரமாக புதியதாக கதவணை கட்ட நடவடிக்கை எடுத்து, தண்ணீர் வெளியேறிச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kadavalam ,Kadayamedu ,Kotam , Kollidam: Due to the water coming out of the gate in Moolaimedu village near Kollidam in Mayiladuthurai district.
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...