×

போதை விழிப்புணர்வு வாரம் கொண்டாட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்கு காட்ட அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆகஸ்ட் 12 முதல் 19 வரை போதைப்பொருள் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க வேண்டுமென அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி நாளை காலை சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை  வைக்கிறார். இந்நிலையில், தமிழக அரசு எடுக்கக்கூடிய இந்த நடவடிக்கையை ஒட்டி,அனைத்து பள்ளிகளிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாளை காலை 10.30 மணிக்கு அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் நாளை காலை 10.30 மணியளவில் அனைத்து மாணவர்களும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்கவேண்டும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வேண்டும் என்றும், இதுபோல் போதை பொருள் பயன்படுத்துவதால் எந்தமாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு, இந்த வயது பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தபட வேண்டும் என்றும் பள்ளிகல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அனைத்துவகை பள்ளிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 


Tags : School Education Department ,drug awareness week , Addiction, awareness week, all school, school education, instruction
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி...