வாணியம்பாடி டோல்கேட்டில் பரபரப்பு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது எனக்கூறி அதிமுகவினர் வாக்குவாதம்-போலீசில் புகார் அளிக்க அதிகாரிகள் முடிவு

வாணியம்பாடி : சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது எனக்கூறி அதிகமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாணியம்பாடிடோல்கேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளதாக அதிமுக சார்பில், நடந்து முடிந்த கட்சியின் பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று, சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்றார்.

அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில்ம், நாட்றம்பள்ளியில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில், நாட்றம்பள்ளி பஸ் நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுகவினர் பைக், கார்கள் மற்றும் வேன்களில் நாட்றம்பள்ளி நோக்கி படையெடுத்தனர். அதன்படி, வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, அதிமுகவினர் நெக்குந்தி சுங்கச்சாவடி வழியாக நாட்றம்பள்ளி சென்றனர். கார்கள் மற்றும் வேன்களில் அதிமுக கொடியை கட்டிக்கொண்டு சென்ற வாகனங்களுக்கு சுங்கச்சாவடி அதிகாரிகள் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 இந்நிலையில், நாட்றம்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வாணியம்பாடி நோக்கி வந்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகியின் காருக்கு வாணியம்பாடி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி, அதிமுகவினர் காரை சுங்கச்சாவடியிலேயே நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் ‘எப்படி பணம் வசூலிக்கலாம்’ என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பதில் அளித்த சுங்கச்சாவடி அதிகாரிகள், ‘நாங்கள் இன்று காலையில் இருந்து, கட்சி கொடியுடன் வந்த எந்த வாகனத்திற்கும் பணம் வசூலிக்கவில்லை. நீங்கள் வைத்திருக்கும் காரின் பதிவெண் கர்நாடக மாநில பதிவு எண்ணாக இருந்ததால், ஊழியர் கட்டணம் வசூலித்துள்ளார்’ என்று கூறியுள்ளனர். எனினும் இதனை ஏற்காத அதிமுகவினர் தொடர்ந்து சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அதிமுகவினரின் இத்தகைய செயல் மிகவும் மோசமானது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: