×

சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர் ரூடி கோட்சன் கார் விபத்தில் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோட்சன். 1992இல் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் முதல்முறையாக நடுவராகப் பணியாற்றினார். அதன்பின் மூன்று வாரங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவராக அறிமுகமானார். அந்த டெஸ்டில் தான் முதல்முறையாக ரன் அவுட்டுக்கு 3ஆவது நடுவர் பயன்படுத்தப்பட்டார்.

331 சர்வதேச ஆட்டங்களுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளார் ரூடி கோர்ட்ஸென். இவர் மெதுவாக இடது கையை உயர்த்தி பேட்டர்களுக்கு அவர் அவுட் கொடுக்கும் விதம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 18 வருடங்கள் நடுவராகப் பணியாற்றிய பிறகு 2010ல் நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு வயது 73. நடுவர் ரூடி கோட்சன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் வழக்கம் போல் கோல்ஃப் விளையாடிவிட்டு தன்னுடைய இல்லத்திற்கு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மறைவிற்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களுரைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Tags : South African cricket umpire who died in a road accident: Condolences from various parties
× RELATED 2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி;...