×

ஆளுநர் மாளிகையில் ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு?.. அண்ணாமலை கேள்வி

சென்னை: ஆளுநர் மாளிகையில் ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 75வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண கொடி ஏந்தி வங்கக்கடலில் பாஜகவினர் படகு பேரணி நடத்தினர். சென்னை நீலாங்கரை கடற்கரையில் படகு பேரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். 250 படகுகள் தேசியக்கொடியுடன் பாஜகவினர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஆளுநர் மாளிகையில் ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை; மாநிலத்தில், நாட்டில், சர்வதேச, நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை பேசுவதும் அரசியல் தான்.

ஆளுநரிடம் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னதற்கு, சமுதாயத்தில் நடைபெறும் விஷயங்களை பேசியதாகதான் அர்த்தம். அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை. அனைத்து விஷயத்திலும் அரசியல் உள்ளது. சாதாரண மனிதர்களை கூட ஆளுநர் சந்திக்கிறார். ஆளுநர் - ரஜினி சந்திப்பை அரசியலாக்க நினைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். அனைத்து தரப்பினரையும் ஆளுநர் சந்திப்பது மரபாக உள்ளது இவ்வாறு கூறினார்.


Tags : Politics ,Rajini ,Governor House ,Anamalai , What was wrong with the Governor talking politics to Rajini at the Governor's House?.. Annamalai Question
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...