காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று..!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதும், பின்பு குறைவதும் இயல்பாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 4,41,90,697 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலானோர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கான கோரி, மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடையணிந்து, காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால், பிரியங்கா மற்றும் அவரது தலைமையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மகளிர் அணியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தனது பணிகளை கவனித்து வருவதாக டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் 2-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு மறுதினமே பிரியங்கா காந்திக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரியங்கா காந்திக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories: