×

விளையாட்டு என்பது சமத்துவம்: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் விளையாட்டு என்பது சமத்துவம் என்று கூறினார். அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: மாமல்லன் ஆட்சி காலத்தில் மாமல்லபுரம் உலக அரங்கில் பேசப்பட்டதா? என்று தெரியாது. ஆனால் தமிழக முதல்வர் ஆட்சியில் மாமல்லபுரம் உலக அரங்கில் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு தமிழனும், இந்தியர்களும் பெருமைப்படும் வகையில் சதுரங்க விளையாட்டு இமாலய வெற்றி அடைய முதல்வரின் அயராத உழைப்பே காரணம் ஆகும். விளையாட்டு என்பது வெற்றி, தோல்வி அல்ல தனிமனித ஒழுக்கம், சுறுசுறுப்பு, நல்ல சிந்தனை, உடல் ஆரோக்கியம், நல்ல செயல்பாடுகள் என ஒருங்கிணைந்த அட்சய பாத்திரம். மேலும், நாடுகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமை, சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து விளையாட்டு வீரர் என்ற அடையாளம் மட்டுமே மிஞ்சும். விளையாட்டு என்பது சமத்துவம். எனவே, உலக அரங்கில் சமூகநீதியை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கும் முதல்வரை உலகமே பாராட்டுகிறது. இது தமிழினத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.


Tags : Minister ,Maianathan , Sports is equality: Minister Meiyanathan's speech
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...