140 அடியை நெருங்குகிறது பெரியாறு அணை

கூடலூர்: பெரியாறு அணையின் நீர்மட்டம் கனமழையால் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 139.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,616 கனஅடியாகவும், தமிழகப்பகுதிக்கு மின் உற்பத்திக்காக வினாடிக்கு 1,866 கனஅடி தண்ணீரும், இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் என 2,216 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ரூல்கர்வ் அட்டவணைப்படி அணையின் நீர்மட்டத்தை நிலை நிறுத்த நேற்று மாலை 4 மணிக்கு, வினாடிக்கு 10,400 கனஅடி தண்ணீர் உபரிநீராக கேரளாவுக்கு திறக்கப்பட்டது.

Related Stories: