×

இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்

பீஜிங்: சீனாவில் படிக்கும் 23 ஆயிரம் மாணவர்கள் கொரோனா தொற்றின் போது இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் இந்தியாவிலேயே இருக்்கின்றனர். இதனால், இவர்களின் படிப்பு வீணாகி வருகிறது. அவர்கள் மீண்டும் சீனா சென்று படிப்பை தொடர விரும்புகின்றனர். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. அதோடு, லடாக் எல்லை பிரச்னையால் இருநாட்டு உறவும் பாதித்துள்ளது. இருப்பினும், மாணவர்கள் நலன் கருதி இரு தரப்பிலும் குறிப்பிட்ட அளவிலான விமானங்களை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சமீபத்தில், சீனா கேட்டுக் கொண்டதன் பேரில் இந்திய மாணவர்களின் பெயர் பட்டியலை ஒன்றிய அரசு அனுப்பி வைத்தது. இதனிடையே, இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் விமானம் மூலம் சீனா திரும்பி உள்ளனர். இந்திய மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் அளித்த பேட்டியில், `வெளிநாட்டு மாணவர்கள் சீனா திரும்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களும் திரும்புவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா கொள்கை விரைவில் உருவாக்கப்பட உள்ளது,’ என்று தெரிவித்தார்.

Tags : Steps to resume studies for Indian students: Chinese Foreign Ministry Information
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்