இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்க அரசு சார்பில் குழு அமைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில்இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிட அரசு சார்பில் குழு  அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை, நந்தனத்தில் உள்ள சர்க்கரை துறை ஆணையர் அலுவலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 12 இணை மின் திட்டங்களில் 6 முடிவுற்ற நிலையில், மீதமுள்ள 6 திட்டப்பணிகளை 2022-23 அரவை பருவத்திலேயே எம்.ஆர்.கே., கள்ளக்குறிச்சி-1 மற்றும் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

முந்தைய ஆண்டுகளில் இருந்து வந்த 3 லட்சம் எக்டர் கரும்பு பரப்பினை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும். கரும்பு விவசாயிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் களப்பணியாளர்கள் சீருடையுடன் பணிக்க செல்ல வேண்டும். ஆலை வாரியாக செயல்திறன், இணை மின் நிலைய பணிகளின் முன்னேற்ற நிலை, ஆலைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், ஆலைகளுக்கு தேவையான கரும்பு உற்பத்தியை மேம்படுத்த கரும்பு நடவு பரப்பளவு பெருக்கம் மற்றும் எதிர்வரும் அரவை பருவத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். கரும்பு நிலுவைத்தொகை உடனடியாக வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயங்காமல் உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்கிட அரசினால் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: