×

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை: ஆளுநர் மாளிகை அரசியல் அலுவலகமா என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசி உள்ளார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகையை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் மாற்றப்படுகிறது. இது தமிழக மக்கள் நலனுக்கு விரோதமானது.


Tags : Political ,Governor's House ,K. Balakrishnan , Political Office or Governor's House? K. Balakrishnan Question
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்