×

சாரல் திருவிழாவின் இன்று 5ம் நாள் கொண்டாட்டம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் மாரத்தான் போட்டி; ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தென்காசி: குற்றாலத்தில் சாரல் திருவிழா, தென்காசி மாவட்டம் உதயமான பிறகு நடைபெறும் முதல் திருவிழா என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இம் மாதம் 5ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடக்கிறது. மேலும் சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக புத்தக கண்காட்சி, உணவுத் திருவிழா ஆகியவையும் நடக்கிறது.  ட்டக்கலைத்துறையின் சார்பில் மலர், காய்கறி, பழம், வாசனை திரவிய கண்காட்சி 5ம் தேதி துவங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

விழாவின் 5வது நாளான இன்று காலை சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தநாராயணன், பிஆர்ஓ இளவரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சைக்கிள் போட்டி, குற்றாலம் கலைவாணர் கலையரங்கம், காசிமேஜர்புரம் வழியாக வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், குத்துக்கல்வலசை ஊர்களின் வழியாக மீண்டும் கலைவாணர் அரங்கை அடைகிறது. ஏற்கனவே ஆணழகன்  போட்டி, பளு, வலு தூக்கும் போட்டிகள், யோகா போட்டி, சமையல் போட்டி, படகு போட்டி, நாய் கண்காட்சி ெகாழு,கொழு குழந்தைகள் போட்டி உள்ளிட்டவை நடந்தது.

Tags : Saral Festival ,Kultalam ,Raja ,MLA , Charal Festival, Cycle Marathon for Tourists at Courtalam, Raja MLA
× RELATED மோடி தமிழநாட்டிற்கு எத்தனை முறை...