சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது

ராமநாதபுரம்: மண்டபம் தேவாலயத்திற்கு வரும் சிறுமிகள், இளம்பெண்களுக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தோணித்துறை, வலையர்வாடி, மரவெட்டிவலசை மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த ஜான் ராபர்ட் பாதிரியாராக பணியாற்றி வந்தார்.

இவர் தேவாலயங்களுக்கு வந்த 3 சிறுமிகள், ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட தேவாலய குழந்தைகளிடம் விசாரித்தனர். இதில், சிறுமிகளுக்கு ஜான் ராபர்ட் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் ஜான் ராபர்ட் (46) மீது மண்டபம் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

Related Stories: