பீகார் அரசியலில் திருப்பம் ஏற்படுகிறதா?... பாஜகவிலிருந்து விலகி லாலு, காங்கிரசுடன் கூட்டு சேர்கிறாரா நிதிஷ்?

பாட்னா: பீகாரில் மகாகத்பந்தன் என்று அழைக்கப்படும் அழைக்கப்படும் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து புதிய ஆட்சியை அமைப்பதற்கான முன்னெடுப்புகளை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகாரில் தனிப்பெரும் கட்சியாக வளர்வதற்கு ஐக்கிய ஜனதா தளம் தடையாக இருப்பதாக பாரதிய ஜனதா கருதி வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளத்தில் ஆர்.பி.சிங், போன்ற மூத்த தலைவர்களை ஏக்நாத் ஷிண்டே போன்று செயல்பட பாரதிய ஜனதா தரப்பு தூண்டியதாக நிதிஷ்குமார் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதாவுடன் கைகோர்த்து நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 243 இடங்களில் 79 எம்எல்ஏக்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். 16 இடதுசாரி எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் 4 கட்சிகளும் சேர்ந்து 160 எம்எல்ஏக்களின் உதவியோடு பலமான கூட்டணி ஆட்சியை அமைக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

லாலு குடும்பத்தின் மீது ஊழல் புகார் கூறி 5 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் இந்த முறை தேஜஸ்வி-க்கு முதலமைச்சர் இருக்கையை வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

Related Stories: