நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்; போதைப் பொருள் ஒழிப்பு பிரசாரம்: கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர்

சென்னை: நாளை மறுநாள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் தொடங்கி வைக்கும்போது, அதே நேரத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களும் உறுதிமொழி எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் மத்தியில் நிலவும் போதை பொருட்களின் கலாசாரத்தை ஒழிக்க, தமிழக அரசு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை வரும் 11ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவை அனைத்து அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தன்னாட்சி கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் பெரிய திரையில் ஒளிப்பரப்ப வேண்டும். இந்த நிகழ்ச்சியின் நேரலை நிகழ்வுக்கான இணைப்பு விரைவில் வழங்கப்படும். நிகழ்ச்சியின்போது அனைத்து மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு எதிராக உறுதிமொழி எடுக்க வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: