×

அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ரூ.1.31 கோடியில் மேம்பாட்டு பணிகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் ரூ. 1.31 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த ஊராட்சி பகுதியில் மழைநீர் கால்வாய், மயானபூமி சுற்றுச்சுவர், நடுக்குளம் மேம்பாடு, அரசுப்பள்ளி கழிவறை, ஆதித்தனார் நகர், பால்வாடி தெரு, கேசவர்த்தினி நகர், அற்புதம் அவென்யூ, செம்பருத்தி நகர், வேணுகோபால் நகர், சங்கமித்ரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கான ரூ. 1 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த  மேம்பாட்டு பணிகள் செய்வதற்கான தொடக்க விழா நேற்று அய்யப்பன்தாங்கல் ஊராட்சி யில் நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய துணை தலைவர் உமா மகேஸ்வரி வந்தே மாதரம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெமிலா பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி, உஷாநந்தினி, திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Ayyappanthangal ,Minister ,Th.Mo.Anparasan , Development works in Ayyappanthangal panchayat worth Rs.1.31 crore; Minister Tha.Mo.Anparasan inaugurated the event
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...