ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபர் மாயம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரியில் குளித்த வாலிர் நீரில் மூழ்கி மாயமானார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (30). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பரான தீபக் உடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள  பெரிய ஏரியில் மது அருந்திவிட்டு குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது, மதுபோதையில் விநாயகம் திடீரென நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதை கண்ட தீபக் நீண்ட நேரம் விநாயகத்தை தேடியும் கிடைக்காததால் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் படகு மூலம் நீரில் மூழ்கி மாயமான விநாயகத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: