×

தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளர்களுக்கான பிசியோதெரபி முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கீழ்கதிர்பூர் அண்ணா பட்டு பூங்காவில் பணியாற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு பிசியோதெரபி முகாம் நடந்தது. இந்தியா முழுவதும் கைத்தறி நெசவாளர்களை நினைவு கூறும் வகையில், நேற்று முன்தினம் கைத்தறித் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய கைத்தறித்தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூரில் உள்ள அண்ணா பட்டு பூங்காவில் நெசவாளர்களுக்கென பிரத்யேக பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். இம்முகாமில், நெசவாளர்களின் உடல்வலி மற்றும் உடல் உபாதையை கண்டறிந்து உடற்பயிற்சி வழியில் சரிசெய்யும் முறையை குறித்து எடுத்துரைத்தார். இதில், பட்டுப் பூங்காவில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags : National Handloom Day , Physiotherapy camp for weavers on the occasion of National Handloom Day
× RELATED தேசிய கைத்தறி தின விழா கொண்டாட்டம்