×

நீட் தேர்வு முடிவுகள் தாமதம் காரணமாக அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வு தேதி மாற்றம்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளிவர தாமதம் காரணமாக, அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு 20ம் தேதி தொடங்குகிறது. 25ம் தேதி பொது கவுன்சலிங் நடைபெறுகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பொறியியல் கலந்தாவிற்கான தேதிகளை அறிவித்து அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீட் தேர்வு முடிவுகள் வெளிவர தாமதமாகும் காரணத்தினால், பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றி  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த கல்லூரிகளாக இருந்தாலும் சமூக நீதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அப்போது 1573 ஆசிரியர்கள் கூடுதலாக இருந்தனர். மேலும் 4,770 பல்கலை கழக ஊழியர்கள் இருந்தார்கள். கூடுதலாக இருந்த ஆசிரியர் வேறு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர். பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் இருந்தனர். தற்காலிக ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு மூன்று மாதம் பணி செய்ய நீட்டிப்பு அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் மேலும் பணி நீட்டிப்பு கேட்கின்றனர். சில இடங்களில் பாட திட்டங்களில் சில பிரச்னைகள் உள்ளது. எனவே 17ம் தேதி நடைபெற உள்ள துணை வேந்தர் மாநாட்டில் பல்கலைக்கழக விவகாரம், பாடப்பிரிவுகள், கூடுதல் பணியாளர்கள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும்.

Tags : Anna University ,NEET ,Minister ,Ponmudi , Engineering consultation date change in Anna University due to delay in NEET results; Minister Ponmudi's announcement
× RELATED தன்னை சுற்றி சக்திவாய்ந்த பெண்கள்...