முன்பதிவு ரயில் பெட்டிகளில் பயணச்சீட்டு சோதனைக்கு கையடக்க கணினி: தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னை: முன்பதிவு ரயில் பெட்டிகளில்  பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கணினியை  தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு சோதனை செய்வதற்காக தெற்கு ரயில்வேயில் பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க  முடியும்.

பரிசோதகர்களின் செயல் திறன் மேம்படும். காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்திற்கு அனுப்ப முடியும். இதன் மூலம் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் இந்த காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வெளிப்படை தன்மையுள்ள, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறையால் காத்திருப்புகளை குறைக்க முடியும்.தற்போது, தெற்கு ரயில்வேக்கு மொத்தம் 857 கையடக்க கணினிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை கோட்டத்திற்கு 246, திருச்சிராப்பள்ளி கோட்டத்திற்கு 101, மதுரை கோட்டத்திற்கு 98, திருவனந்தபுரம் கோட்டத்திற்கு 148, பாலக்காடு கோட்டத்திற்கு 140, சேலம் கோட்டத்திற்கு 124  கையடக்க கணினிகள் விநியோகப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயில் இயங்கும் சுமார் 185 ரயில்களில் 800க்கும்  கையடக்க கணினிகள் ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதி மேலும் பல ரயில்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மேலும், ரயில் எண்.22672/22671 மதுரை - சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ், ரயில் எண்.12653/12654 சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண்.12673/12674 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - டாக்டர் எம்ஜிஆர். எக்ஸ்பிரஸ், ரயில் எண்.22153/22154 சென்னை எழும்பூர் - சேலம் - சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் கையடக்க கணினிகள் டிக்கெட் சோதனைக்காக டிடிஇக்களால்  பயன்படுத்தப்படுகின்றன.

Related Stories: