×

சிந்து, லக்‌ஷியா, சாத்விக் - சிராஜ் அசத்தல்; பேட்மின்டனில் தங்கமான நாள்

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான நேற்று பேட்மின்டனில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. சிந்து அசத்தல்: மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, கனடா வீராங்கனை மிஷெல் லி சவாலை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சிந்து 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 21-15, 21-13 என நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் போட்டியில் சிந்து வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

லக்‌ஷியா அமர்க்களம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசியாவின் ட்ஸே யாங்குடன் நேற்று மோதிய இந்தியாவின் லக்‌ஷியா சென், கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். லக்‌ஷியா சென்னுக்கும் இது முதல் காமன்வெல்த் தங்கமாகும்.

இரட்டையரில் சாதனை: ஆண்கள் இரட்டையர் பிரிவு பேட்மின்டன் பைனலில் இந்தியாவின் ராங்கிரெட்டி சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி சந்திரசேகர் இணை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் பென் லேன் - ஷான் வெண்டி ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. பேட்மின்டனில் நேற்று ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது, இந்தியா பதக்க பட்டியலில் 4வது இடத்தை பிடிக்க உதவியது.

Tags : Sindhu ,Lakshya ,Sadhvik - Siraj , Sindhu, Lakshya, Sadhvik - Siraj is awesome; A golden day in badminton
× RELATED சாரநாதன் பொறியியல் கல்லூரியில் லக்ஷ்யா பல்சுவை நிகழ்ச்சி