மாநகர கழக பொது தேர்தல் வேட்பு மனு ஆவடியில் இன்று வினியோகம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

ஆவடி: ஆவடியில் தலைமை அலுவலகத்தில் ஆவடி மாநகர கழக 15வது பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று வழங்குவதாக மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான சா.மு.நாசர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட ஆவடி மாநகரத்தில் திமுகவின் 15வது பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், இன்று ஆவடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்ட தலைமைக்கழக பிரதிநிதி இராசா அருண்மொழியிடம் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.  பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் வேட்புமனுக்களை பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் நாளை மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இதற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், கழக முன்னோடிகள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

Related Stories: