வெ.இண்டீசுக்கு எதிராக கடைசி போட்டியிலும் வெற்றி: டி.20 உலக கோப்பைக்கு இந்தியா தயார்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

புளோரிடா: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் 5வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்தது. ரோகித்சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்தினார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்தில், 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 64, தீபக் ஹூடா 38(25பந்து), பாண்டியா 28(16பந்து), சாம்சன் 15, தினேஷ் கார்த்திக் 12, இஷான் கிஷன் 11 ரன் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 15.4 ஓவரில் 100 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மயர் 56 (35 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஷமர் ப்ரூக்ஸ் 13, டெவோன் தாமஸ் 10 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். இதனால் இந்தியா 88 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4-1 என தொடரை கைப்பற்றியது. ரவி பிஷ்னோய் 4, குல்தீப், அக்சர் பட்டேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருதும், அர்ஷ்தீப் சிங் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். ரோகித் முதல் 4 போட்டியில் அனைத்தையும் செய்து முடித்துவிட்டார். இன்று என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். அணியில் தற்போது பல திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு விளையாட முழு சுதந்திரமும் கிடைக்கிறது. இதுதான் புது இந்தியா. தோல்வியை கண்டு எந்த வீரரும் கவலைப்படாமல், தன்னால் முடிந்ததை சிறப்பாக செய்கிறார்கள். டி20 உலகக் கோப்பைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இருப்பினும், தொடர்ந்து பாடம் கற்றுக்கொண்டே இருப்பது மிகவும் அவசியம். அதனை செய்யவில்லை என்றால், விளைவு மோசமாக இருக்கும்’’ என்றார்.

Related Stories: