×

தேனி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 200 கண்மாய்களில் 1.75 லட்சம் பனை விதை நடவு-பசுமை பாதுகாப்பு பணியில் தன்னார்வ அமைப்பினர்

தேவாரம் : தேனி மாவட்டத்தில் இயற்கையை நேசிக்கும் தன்னார்வ அமைப்புகள் ஒன்று சேர்ந்து 4 ஆண்டுகளில் கண்மாய்க்கரைகள், குளக்கரைகள் என நீர்நிலைகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளனர். இயற்கையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதே எங்களின் நோக்கம் என தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் இயற்கை வளம் நிறைந்த மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் பசுமைப் போர்வை போர்த்தியது போல இருக்கும். போதிய மழை இல்லாவிட்டால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விடுகிறது. இந்நிலையில், இயற்கையை பாதுகாக்க தன்னார்வ இளைஞர்கள் பனை விதைகளை நடவு செய்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். தேனி, கோட்டூர், காமாட்சிபுரம், தேவாரம், ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி என மாவட்டம் முழுவதும் இயற்கையை நேசிக்கும் இளைஞர்களை ஒன்று சேர்ந்து தேனி ரூரல் அப்ளிமென்ட் டிரஸ்ட், நன்செய், என பல்வேறு பெயர்களில் மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளை தொடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து 2017 ஆண்டு முதல் தொடங்கி 2021 வரை 200 கண்மாய்களில் பனை மரங்களை விதைத்துள்ளனர்.

இன்னும் 100 வருடங்களில் இயற்கையின் பாதுகாத்து இனிவரக்கூடிய தலைமுறைகள் அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னார் அமைப்பினரின் நோக்கமாக உள்ளது. இதற்காக பனை மரத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்காக தனது முழு ஆதரவினையும், தேவையான நிதியும் தந்து இயற்கை உழைப்பிற்கு பசுமை நேசர் தொழிலதிபர் நைனார் முகமது என்பவர் ஊக்கப்படுத்தி, உற்சாகம் தர இன்று விதைகள் விருட்சமாக மாறி வருகின்றன. ரியல் எஸ்டேட் முதலைகளின் நில வியாபார ஆதிக்கத்தினால் அதிகம் வளர்ந்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பனை மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், தேனிமாவட்டத்தில் இதற்கு உயிரூட்டப்படுவது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாக்ஸ் 120 ஆண்டுகள் ஆயுள் கொண்ட பனைபனைமரங்கள் 120 வருடங்கள் ஆயுள் உடையது. நடப்பட்டு 7 வருடம் கழித்தே இதன் வித்துக்கள் விருட்சமாக வளரத்தொடங்கும். 30 வருடம் கழித்துதான் பயன்தரும். ஆனால், இதன் வேர்கள் ஒட்டகத்தை போன்று தமது சந்ததியினரை காக்கக்கூடியது. இதன் வேர்கள் விழுதுகளாய் வளர்ந்து மழை காலங்களில் எதிர்கால சந்ததியினருக்காக நிலத்தடி நீரை பாதுகாத்து, மரத்தை சுற்றியுள்ள இடங்களையும் காத்து நிற்கும். மண் அரிப்பை அடியோடு தடுப்பதுடன், இன்று உலகையே அச்சுறுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கூடியது. காரணம் பனை இலை முதல் பதநீர், கருப்பட்டி, நுங்கு என இயற்கையை நேசிக்கிறது. முற்காலத்தில் நம் முன்னோர்கள், ஜீனிக்கு பதிலாக சர்க்கரை, கருப்பட்டியை தான் பயன்படுத்தினார்கள். அன்று சர்க்கரை நோய் கொடுமை இல்லை. இன்று பனை மரம் அழிக்கப்பட்டு வருவதால் நோய்கள் பெருகிவிட்டன. இதனாலயே பனையை முன்னெடுத்து தன்னார்வலர்கள் விதைத்து வருகின்றனர்.

அனைவரும் கரம் கோர்த்துள்ளோம்தேனி ரூரல் சோஷியல் அப்ளிமென்ட் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த யாசர் அரபாத் கூறுகையில், ‘முதலில் 100 விதைகள் 10 பேர் சேர்ந்து நட்டோம். இதன் பயன்தெரிய ஆரம்பித்தவுடன் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் இயற்கையை நேசிக்கும் தன்னார்வலர்கள் எங்களுடன் கரம் கோர்த்தனர். சாதி, மதம், அமைப்புகள் என அனைத்தையும் கடந்து வறண்டு போன கண்மாய்கள், குளங்கள், நீர்வழிப்பாதைகள் என எல்லாவற்றையும் கண்டறிந்து, ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள தன்னார்வ அமைப்புகளை சேர்த்து விதைத்தன் பயனாக இன்று 1.75 பனை விதைகள் நடப்பட்டுள்ளன. நட்டதோடு விட்டுவிடாமல் அவைகளை பாதுகாத்திட தேவையான குழுக்களை அமைத்தும் கண்காணிக்கிறோம்’ என்றார்.

இயற்கை நேசர் விக்னேஷ்பாபு கூறுகையில், ‘பனைமரங்கள் தவிர, மரங்களை காப்பதற்கு பல திட்டங்களை வைத்து முன்னெடுத்து செல்கிறோம். இதில் முக்கியமானது சாலையோரங்களில் மரங்களின் ஆணிகள், போர்டுகள் வைப்பதை தடுப்பதும், எங்கெல்லாம் மரங்கள் வெட்டப்படுகிறதோ அந்த பகுதிகளை தேர்ந்தெடுத்து மரங்களை நடுவதும் நடக்கிறது. எங்களது தன்னார்வலர்கள் குழுவினரால் இதுவரை 300 கிலோ ஆணிகள் மரங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், விளம்பர போர்டுகள் இல்லாத மரங்களை தேனி மாவட்டத்தில் காண முடியும். இயற்கை மரங்களை யார் அழிக்க நினைத்தாலும், உடனே புகார் தந்து வருகிறோம். எங்களது நோக்கம் வருங்கால தலைமுறையினருக்கு இயற்கை பாதுகாத்து கொடுப்பதே’ என்றார்.

Tags : Honey District , Devaram: In Theni district, nature-loving voluntary organizations have come together to create Kanmaikarai and pondakarai in 4 years.
× RELATED மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை சாலையை சீரமைக்க கோரிக்கை