×

ஆருத்ரா கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரக்கோரி முதலீட்டாளர்கள் சாலைமறியல்-நெமிலியில் திடீர் பரபரப்பு

நெமிலி : நெமிலியில் ஆருத்ரா கோல்டு லோன் நிறுவனம் என்ற பெயரில் ₹1 லட்சம் கொடுத்தால் ₹30 ஆயிரம்  தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் அதிக அளவில் பணத்தை வசூல் செய்துள்ளனர்.  நெமிலி கிளையை சயனபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் யோகானந்தா ஆகிய 2 பேர் நடத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் பலரது கிளை அலுவலகங்களில் இருந்து பல கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள்  முடக்கம் செய்தனர்.

இந்நிலையில் நெமிலி கிளையில் முதலீடு செய்துள்ள சயனபுரம்  கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்று தரும்படி நெமிலி- சேந்தமங்கலம்  சாலையில் அமர்ந்து நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இப்போராட்டம் நடைபெற்றது.

 தகவலறிந்து அங்கு வந்த போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வழக்கு தொடர்பாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

 இந்த சாலை மறியல்  காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்த கிராமத்தில் மட்டும் சுமார் ₹300 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் இதேபோன்று பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் அளவில் பணம் முதலிட்டு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : Dakkori ,Aruthra , Nemili: In Nemili, in the name of Arudra Gold Loan Company, they promised to give ₹30,000 if you pay ₹1 lakh.
× RELATED ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்!