×

நிலக்கரி முறைகேடு வழக்கு.: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

டெல்லி: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2004 முதல் 2009 வரை 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

மேற்குவங்க மாநிலம் மொய்ரா, மதுஜோர் பகுதிகளில் 2 நிலக்கரி சுரங்கங்கள் விகாஷ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி கடந்த 2012 செப்டம்பரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, முன்னாள் இணை செயலாளர் கே.எஸ். குரோவா, முன்னாள் இயக்குநர் கே.சி.காம்ரியா, விகாஷ் மெட்டல்ஸ் மேலாண்மை இயக்குநர் விகாஷ் பாட்னி, அதன் நிறுவன மூத்த அதிகாரிகள் 2 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது, முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஒன்றிய நிலக்கரித்துறை இணை செயலாளர் கே.எஸ்.குரோஃபாவுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 


Tags : Former ,Coal Secretary ,HC Gupta , Coal embezzlement case: Former Coal Secretary HC Gupta sentenced to 3 years in jail
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...