அழகால் ஈர்க்குது கொடைக்கானல் நனைக்கும் மழை நடுக்கும் குளிர்

கொடைக்கானல் : இயற்கை அழகை ரசிப்பதற்காக வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருப்பது வழக்கம். இதன்படி நேற்று, கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக குற்றாலத்தில் பெய்வது போன்று பூஞ்சாரல் மழை பெய்து வருகிறது. இந்த பூஞ்சாரல் மழையை சுற்றுலாப் பயணிகள் அதிகம் ரசித்தனர். இதில் நனைந்தபடியே அழகிய இடங்களை ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் குளிர் அதிகரித்து வருகிறது. கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பூத்திருக்கும் பூக்களை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் சென்றனர்.

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அருவிகளில் மழை நீர் கொட்டி வருகிறது. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சுற்றுலா பயணிகள் ரசித்துச் சென்றனர்.

Related Stories: