தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து பேசினார். நடிகர் ரஜினிகாந்த் 2 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்திருந்தார். இதற்கு முன்பாக டெல்லி பயணத்தின் ஒரு அங்கமாக சந்திரபாபு நாயுடு அவர்களையும் சந்தித்திருந்தார். இதனிடையே இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை, நடிகர் ரஜினிகாந்த், சந்தித்து பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆளுநரை சந்தித்ததற்கான முழுமையான விவரங்கள் தற்போது வெளியாகாத நிலையில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அவரது செயதி தொடர்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து ரஜினி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக ஆளுநராக ஆளுநர் ஆர்.என். ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடிகர் ரஜினி சந்தித்திருக்கிறார்.

Related Stories: