×

உடல் முழுவதும் கொப்பளங்கள்!: ராஜஸ்தான், குஜராத்தில் கொத்து கொத்தாக மரணிக்கும் பசு மாடுகள்..3,000 கால்நடைகள் உயிரிழப்பு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் உடல் முழுவதும் ஏற்படும் கட்டிகள் எதிரொலியாக கால்நடைகள் கொத்து கொத்தாக மடிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஒரு வித வைரஸ் நோய் தாக்கி கால்நடைகள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றன. உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் கட்டிகளால் கால்நடைகள் பலியாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் தற்போது வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் மாண்டிருக்கின்றன. ராஜஸ்தானில் ஜலோர் , ஜோத்பூர், பாரான், ஸ்ரீ கங்கா நகர், ஜெய் சல்மேர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த நோய் பரவி இருக்கிறது.

குஜராத்தில் சவுராஷ்டிரா பகுதி முழுவதிலும் கால்நடைகளுக்கு இந்நோய் பரவி உள்ளது. பஞ்சாபில் தீவிரமாக பரவி வரும் மர்ம நோய்க்கு 400 மாடுகள் உயிரிழந்திருக்கின்றன. கால்நடைகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியாகி வருவதால் வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக அமெரிக்காவில் இருந்து தடுப்பூசியை வரவழைத்து கால்நடைகளுக்கு பயன்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Rajasthan ,Gujarat , Koppalam, Rajasthan, Gujarat, 3,000 cattle, loss of life
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...