ராஜஸ்தான் மாநிலத்தில் ஷ்யாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!: ஒரே நேரத்தில் பக்தர்கள் வெளியேற முயன்றதால் விபரீதம்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கோயில் ஒன்றின் சிறப்பு பூஜையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துவிட்டனர். சவான் மாதத்தின் கடைசி திங்கட்கிழமையை வடமாநிலங்களில் மக்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ராஜஸ்தானில்  ஹிகார் நகரில் உள்ள ஷ்யாம்ஜி கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜையில் பங்கேற்க அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

நெருக்கமுடியாத அளவுக்கு நிலைமை மோசமானதால் ஒரே நேரத்தில் கோயில் வாசலை நோக்கி பக்தர்கள் முன்னேறினர். இதனால் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்துள்ள 7 பேர் ஜெய்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராஜஸ்தான் காவல்துறையினர், பக்தர்களை கட்டுப்படுத்த போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படாததே நெரிசலுக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

Related Stories: