×

1971ம் ஆண்டு காணாமல் போன பார்வதி ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு: அமெரிக்காவில் இருந்து மீட்டு தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை

கும்பகோணம்: 1971ம் ஆண்டு காணாமல் போன 12ம் நூற்றாண்டை சேர்ந்த பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட 5 பஞ்சலோக சிலைகளில் ஒன்று பார்வதி சிலை. இந்த சிலை திருட்டு குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 53 வருடத்திற்கு பிறகு பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.  50 செமீ உயரம் கொண்ட சோழர் காலத்து பார்வதி சிலை. சோழர் காலத்தை சேர்ந்த இந்த சிலையில் இன்றைய மதிப்பு சுமார் 1 கொடியே 68 லட்சம் ரூபாய் ஆகும்.

அமெரிக்காவில் போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பார்வதி சிலை 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும், 16 கோடிக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஐம்பொன் பார்வதி சிலையை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Parvati Aimbon ,Tamil Nadu ,United States , 1971 Missing Parvati Aimpon Idol Found: Actions To Bring It From America To Tamil Nadu
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து