×

கி.மு. 300 முதல் 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு காலகட்டங்களில் உருவானது கீழடி நகரம்; மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தகவல்

திருப்புவனம்: கீழடி நகரம் பல்வேறு காலகட்டங்களில் உருவான நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர்  அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தை மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை தமிழக பிரிவு தலைவரும் முன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளரும், கீழடி அகழாய்வை முதன்முதலில் மேற்கொண்டவருமான அமர்நாத் ராமகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அப்போது அவர் கூறியதாவது: கீழடியில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறுவது மிகவும் சிறப்பானது.

110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும். இரண்டுகட்ட அகழாய்வில் ஏராளமான பொருட்களை நாங்கள் கண்டறிந்தோம். இன்னும் இருகட்ட அகழாய்விற்கு அனுமதி கிடைத்திருந்தால் கூடுதல் ஆவணங்கள் கிடைத்திருக்கும். கீழடியில் இருகட்ட அகழாய்வு பணிகள் குறித்து அறிக்கைகள் தயாரித்து வருகிறோம். கீழடியில் உள்ள கட்டிடங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. கீழடி கட்டிடங்களை கிமு 300க்கு முன், பின் என இரு வகையாக பிரிக்கலாம். கீழடி நகரம் ஒரே காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை. பல்வேறு காலகட்டத்தை சேர்ந்தது இந்த நகரம். கி.மு 300ல் இருந்து 10ம் நூற்றாண்டு வரை உருவாகி இருக்கக் கூடும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : BC ,Geelyadi ,Central Archaeological ,Superintendent ,Amarnath Ramakrishnan , BC The city of Geelyadi was formed in various periods from 300 to 10th century; Central Archaeological Superintendent Amarnath Ramakrishnan Information
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...