×

சென்னை மாநகர போலீஸ் அதிரடி லாட்ஜ், மேன்ஷன்களில் சிறப்பு சோதனை 92 வாகனங்கள் பறிமுதல்

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னையில் லாட்ஜ், மேன்ஷன்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு, சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, 92 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், முக்கிய இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்றுமுன்தினம் சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 426 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர்.

இச்சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர், இரவு சென்னையிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, 4,951 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில், மது போதை மற்றம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 92 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்கள் அடையாளம் காணும்கேமரா மூலம் 2,547 நபர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், குற்ற நபர்கள்அல்லது சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags : Chennai Metropolitan Police Action Lodge , Chennai Metropolitan Police Action Lodge, special search in mansions, confiscation of 92 vehicles
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...