சிகிச்சை முடிந்து 1,429 கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 346 அரசு மையங்களும், 269 தனியார் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1429 பேர் சிகிச்சை  முடிந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனைக்காக 346 அரசு தரப்பிலும், 269 மையங்கள் தனியார் தரப்பிலும் செயல்பட்டு வருகின்றன. நேற்றைய கணக்கின் படி தமிழகத்தில் 10,261 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று 1057 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 1429 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.

நேற்றைய நிலவரப்படி கொரோனா தாக்குதலில் இறப்பு ஏதும் இல்லை. இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 9889 பேர் தற்போது சிகிச்கையில் உள்ளனர். தமிழகத்தில்கொரோனா பரிசோதனை செய்ததில் இதுவரை 35 லட்சத்து 52 ஆயிரத்து 698 பேர் தங்களை பரிசோதித்துக் கொண்டுள்ளனர். ஆர்டி பிசிஆர் பரிசோதனை இதுவரை 6 கோடி 71 லட்சம் பேருக்கு செய்யப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Stories: